Breaking News

திமுக வேட்பாளர் வ.ஜெகன்நாதனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு...

வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வ.ஜெகன்நாதன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து  பல்லவன் நகர், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட பிரதிநிதியும் தேர்தல் பொறுப்பாளரும்மான எம்.எஸ்.சுகுமார் தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் தாமல் ராஜா,முட்டவாக்கம் மனோகரன், குணபுஷணம், மஞ்சுகாந்தன், ரமேஷ், மோகனவேல், உள்ளிட்ட திமுகவினரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.





No comments

Thank you for your comments