Breaking News

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு MP சூறாவளி தேர்தல் பிரச்சாரம்

காஞ்சிபுரத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு MP சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 1 முதல் 51 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரும்மான டி.ஆர்.பாலு சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


பின்பு திமுக வேட்பாளர்களை உதயசூரியன் சின்னங்களிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை கை சின்னத்திலும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளரை ஏணி சின்னத்தில் ஆதரித்து பெரிய காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், பிள்ளையார்பாளையம், ஓரிக்கை, செவிலிமேடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் திருமண மாளிகைகளில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் MLA தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  திமுக தலைமையிலான மச்சாற்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு வாக்குகளை சேகரித்து சிறப்புரையாற்றினார்.

இந்த பிரச்சார கூட்டங்களில்  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA,மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கே.ஏ.செங்குட்டுவன்,  பி.எம்.குமார், க.குமணன, எஸ்.பி.பூபான், டி.குமார், ஏ.எஸ்.முத்துசெல்வம், எம்.எஸ்.சுகுமார், உள்ளிட்ட திமுகவினரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.











No comments

Thank you for your comments