விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்..
விருத்தாசலம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.. லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது இத்திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோயிலாகும்...
காசியை விட வீசம் அதிகம் காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள மணிமுக்தா ஆற்றில் நீராடி விருத்தகிரீஸ்வரர் வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடி சென்றுள்ளனர்
இத்திருக்கோயிலில் பஞ்சாட்சர முறைப்படி 5 கோபுரம், 5 கொடிமரம், 5 தீர்த்தம், 5 தேர், 5 நந்தி , 5மண்டபம், 5 கால பூஜை என சிறப்புடையது
முருகனைப் போன்று விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு இத்திருக்கோவிலில் ஆழத்து விநாயகர் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாகும்
அப்படிப்பட்ட சிறப்புவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 27-ம் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது
அதனை தொடர்ந்து 3-ம் தேதி முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 4-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது 5-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை மாலை ஐந்தாம் கால யாகபூஜை நடைபெற்றது .
இன்று காலை 4 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்று பின்னர் கிழக்கு கோபுரம், வடக்கு கோபுரம், மேற்கு கோபுரம், தெற்கு, கோபுரம், கண்டராதித்தன் கோபுரம், என ஐந்து கோபுர கலசங்கள் மற்றும் விருத்தகிரீஸ்வரர் மூலவர் , விருத்தாம்பிகை, பாலாம்பிகை, விநாயகர், ஆகம திருக்கோவில் ஆகிய விமானங்களில் உள்ள கலசங்களுக்கும் சிவாச்சாரியார்களால் யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசங்களை தலையில் சுமந்து மேள தாளங்களுடன் பிரகாரங்களை சுற்றி கொண்டுவரப்பட்ட புனிதநீரை கேபுரங்கள், விமானங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகாதீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் மூலம் கோபுரங்களில் மலர்கள் தூவப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு பணியில் 1500 காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments