Breaking News

மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டுவிலக்கி வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ...

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் மீனவ குடும்பத்தினரை  ஊரைவிட்டுவிலக்கி வைத்த சம்பவத்தால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  வருவாய் கோட்டாட்சியர்  க.சேதுராமலிங்கம் விசாரணையின் அதிரடி தீர்ப்பால் ஊரைவிட்டுவிலக்கி வைத்த மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சியுடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயம் உள்ளது.  இங்கு பங்கு பேரவை நிர்வாகத்தின் பெயரில் ஊரில் உள்ள பெண்களை வைத்து அம்பிய வழிகாட்டியாக கட்டப்பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி கிறிஸ்தவ திருத்தலத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி ஊரை சேர்ந்த ஜேம்ஸ் வர்மா எந்தவிதமான தவறும் செய்யாத நிலையில் அவரது குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கன்னியாகுமரி ஊர் பங்கு பேரவை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதை அறிந்த ஜேம்ஸ் வர்மா  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் மா.அரவிந்த் அவர்களிடம் மனு அளித்தார். அந்த மனுவை ஏற்று மாவட்ட ஆட்சியாளர் அவர்கள்  4.02.2022 அன்று காலை 11.30 மணி அளவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலய திருத்தல ஊர் கமிட்டி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை அழைத்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள  கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து விசாரிக்கப்பட்டது வி

சாரணையில் ஊர் நிர்வாகம் செய்தது தவறு என்று உண்மை அறியப்பட்டது.   

அப்போது வருவாய் கோட்டாட்சியர்  க.சேதுராமலிங்கம் அவர்கள் தலைவர் துணைத் தலைவரிடம் உங்கள் பங்கு பேரவை அலுவலகத்தில் கட்டபஞ்சாயத்து நடத்தக்கூடாது. அந்த பங்கில் உள்ள மீனவ மக்களை ஊரைவிட்டு ஒதுக்கவோ அவர்களை துன்புறுத்தவோ எந்தவிதமான புகார்களும் எங்களிடம் வரக்கூடாது மேலும் எங்களிடம் வரப்பட்ட புகார் மனுதாரர் ஜேம்ஸ் வர்மாவை உடனடியாக ஓர் நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும்.

உங்கள் ஊர் உள்ள பிற சபைக்கு  போகும் நபர்களை ஊரை விட்டு நீக்க  அதிகாரம் உங்களுக்கு கிடையாது. எங்களுக்கு புகார் அளித்தால் சட்டப்படியாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை  செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

வருவாய் கோட்டாட்சியர்   க.சேதுராமலிங்கம் அவர்களின் அதிரடி தீர்ப்பால் ஊரைவிட்டுவிலக்கி வைத்த மீனவ குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

No comments

Thank you for your comments