நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022-க்கான வாக்காளர் குறும்படம் விழிப்புணர்வு...
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் பணிகளை கண்காணித்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப., (HAR SAHAY MEENA I.A.S,) அவர்களை நியமித்திருந்தது. மேலும், மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளரிடம் புகாரளிக்க 90033 72229 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப., கோவை மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாராண தேர்தல் தொடர்பாக மாவட்ட நிலை கண்காணிப்பு அலுவலர்களுடனான (Nodel Officer's) ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி காவல் ஆணையர் பிரதீப்குமார் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பார் செல்வநாகரத்தினம் இ.கா.ப., மாநகராட்சி ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர் ஆணையாளர் ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப., தெரிவித்ததாவது,
கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சிகளில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் 198 வார்டுகளும் மற்றும் 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளும் உள்ளன. கோவை மாநகராட்சியில் 15,38,411 வாக்காளர்களும் நகராட்சியில் 1,81,316 வாக்காளர்களும் மற்றும் பேரூராட்சியில் 4,73,207 வாக்காளர்களும் என மொத்தம் 21,92,934 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநகராட்சியில் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், 20 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 15 பறக்கும் படையினரும், நகராட்சியில் 7 தேர்தல் நடத்தும்அலுவலர்களும், 21 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 21 பறக்கும் படையினரும், பேரூாட்சியில் 33 தேர்தல் நடத்தும் அலுவலர்களும் 66 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 33 பறக்கும் படையினரும், என மொத்தம் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 107 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 69 பறக்கும் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 1130 பேரும், 7 பேரூராட்சிகளில் 198 வார்டுகளில் 1097 பேரும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 2346 பேரும் என மொத்தம் 4573 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஒரு வாக்கு எண்ணும் மையமும், 7 அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 181 ஒரு மாநகராட்சியில் நகராட்சிகளுக்கு 7 வாக்கு எண்ணும் மையங்களும், 33 பேரூராட்சிகளுக்கு 9 வாக்கு எண்ணும் மையங்கள் என மொத்தம் 17 வாக்கு எண்ணும் மையங்கள் வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 112 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சிகளில் 143 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 436 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
பதட்டமான வாக்குச் சாவடிகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா இ.ஆ.ப., தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்-2022-க்கான வாக்காளர் குறும்படம் பணியினை விழிப்புணர்வு மாவட்டத்திற்கான தேர்தல் திரையிடும் பார்வையாளர் ஹர் சகாய மீனா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
No comments
Thank you for your comments