Breaking News

திமுக வேட்பாளர் சோபனா கண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு

 காஞ்சிபுரம், பிப்.17-

காஞ்சிபுரம் மாநகராட்சி 33வது மாமன்ற திமுக வேட்பாளர் சோபனா கண்ணன் தீவிர வாக்கு சேகரித்தனர்.

வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சோபனா கண்ணன் உதயசூரியன் சின்னத்தில்   33வது  வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

இதில் 33வது வட்டத்தை சேர்ந்த மோகனவேலு, ரவிசந்திரன், மேகநாதன், சண்முகம், கண்ணன், தணிகை வேலு, ரவி, ஏ.ஆர்.எஸ்.சதிஸ்குமார், சிவசிதம்பரம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.




No comments

Thank you for your comments