Breaking News

17வது மாமன்ற திமுக வேட்பாளர் சசிகலா ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பிரச்சாரம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சி 17வது மாமன்ற திமுக வேட்பாளர் சசிகலா ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் இறுதி நாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் சசிகலா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் 17வது  வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், எஸ்.பி.பூபாலன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாமல்லன், இளஞ்செழியன், வழக்கறிஞர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.







No comments

Thank you for your comments