Breaking News

18வது மாமன்ற திமுக வேட்பாளர் மல்லிகா இராமகிருஷ்ணனை ஆதரித்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது மாமன்ற திமுக வேட்பாளர் மல்லிகா இராமகிருஷ்ணனை ஆதரித்து திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மல்லிகா இராமகிருஷ்ணனுக்கு உதயசூரியன் சின்னத்தில்  மாநில திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம்  18வது  வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் தேர்தல் பொறுப்பாளர்கள் எஸ்.பி.பூபாலன் ,மாமல்லன், சுந்தரவரதன், மண்டி சம்பத், மண்டி வரதன், வழக்கறிஞர் அரவிந்த் குமார், எஸ்.பி.பூபாலன் மற்றும் 18வது வட்டத்தை சேர்ந்த திமுகவினர் மற்றும் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.









No comments

Thank you for your comments