Breaking News

வரும் 7ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

சென்னை:

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட,  சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக வரும் 7ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பிய நிலையில், ஆளுநர் டெல்லி செல்ல உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

No comments

Thank you for your comments