Breaking News

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பயிற்சி கருத்தரங்கு

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில், மாவட்டஅளவிலான குழந்தைகள் மற்றும் வளர் இளம் -பெண்களின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி கருத்தரங்கு வெள்ளிகிழமை அன்று அருளருவி பயிற்ச்சி மையத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கே.பி. செந்தில் ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட சமூக அலுவலர் பவித்திரா தலைமை உரையாற்றினார். மெல்லின் நோக்க உரையாற்றினார்.  

மேலும் இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பாதுகாப்பு அலகு தலைவர் சரவணன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் சரவணன்,  தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 

மேலும் சட்டம் சார்ந்த பயிற்சி ரேவதி தோழி கூட்டமைப்பு மற்றும் வழக்கறிஞர் ரவி ஆகியோர் சிறப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள்  சுய உதவி குழு உறுப்பினர்கள்  தொழிற்சங்க பிரதிநிதிகள்  சமூக ஆர்வலர்கள்  குழந்தைகள் பெற்றோர்கள் அங்கன்வாடி அலுவலர்கள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள்  பங்கேற்றனர்.

மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது. குழந்தைகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, உட்புகார் குழு எவ்வாறு செயல்படுத்துவது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக சரளா செந்தில்குமார் நன்றியுரை கூற கருத்தரங்கு நிறைவு பெற்றது.

No comments

Thank you for your comments