Breaking News

2வது வார்டு வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்...

காஞ்சிபுரம்:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் விமலாதேவி சேகரன் அவர்கள்  உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டினார். 

2வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியத்தில் வாக்குகளை சேகரித்தார். தேர்தல் பொறுப்பாளர்கள் சி.வி.எம்.அ.சேகரன், பி.எம்.குமார், எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், அபுசாலி, உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments