39வது வார்டு வேட்பாளரை ஆதரித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு...
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வ.ஜெகன்நாதனுக்கு ஆதரவாக, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் / சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் கலந்துகொண்டு 39வது வார்டுக்கு உட்பட்ட திருப்பூர் குமரன் தெரு,மாஸ்டர் மாணிக்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாணவரணி செயலாளர் / சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், தேர்தல் பொறுப்பாளர்கள் சி.வி.எம்.அ.சேகரன், எம்.எஸ்.சுகுமார், ஏ.எஸ்.முத்துசெல்வம், எஸ்.பி.பூபாலன், இளஞ்செழியன், தாமல் ராஜா, அறிவழகன், பார்த்திபன், செல்வம், சித்திரை சுரேஷ், குணபூஷணம் உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments