Breaking News

ஏஐசி ரைஸ் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி தயாரிப்பு பொருட்கள் அறிமுகம்..

 கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏஐசி ரைஸ் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சியின் மூலம்   தயாரித்த டீசர்ட் மற்றும் ரூஃபிங் ஷீட் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

சர்க்கில் எக்ஸ் சர்க்கில் எக்ஸ் என்பது கழிவு  மேலாண்மையிணை அடிப்படையாக கொண்ட  தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்ய அங்கீகக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். மேலும் பொதுமக்களிடம் இருந்து கழிவுகளை சேகரித்து அதை மறுசுழற்சி செய்து இந்த உலகில் கழிவுகள் அற்ற சமுதாயமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும். 

கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் 700க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் 500 மெட்ரிக் டன் கழிவுகளின் மறுசுழற்சிக்கு வழிவகை செய்கிறது. ஈபிஆர் மூலம் 20க்கும் மேற்பட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், 50க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களுடனும் மற்றும் யுஎல்பிக்களுடன் நேரடியாக இணைந்து வேலை செய்கிறது. புதிய காலக்கழிவு மேலாண்மை தளமான  சர்க்கில்எக்ஸ் இன்பிளிக்சன் பாயின்ட் வென்ச்சர்ஸ்  தலைமையில் ஆரம்ப கட்ட நிதியாக ரூ.1.9 கோடி அல்லது $254கே நிதி திரட்டியுள்ளது. 

6200 க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள், சமூகத்தில் நிகரற்ற மதிப்பு கொண்ட தனி மனிதர்களைக் கொண்ட முதலீட்டு தளமாகும். திரட்டப்படும் நிதி சந்தைப்படுத்தல், செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தப்படும். 

இந்த மூலதன நிதியைக் கொண்டு நம் நாட்டின் முன்னணி நகரங்களிலும், தென்னிந்தியாவிலும் புதிய சந்தைப்படுத்தல் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது நிறுவனம் புதிய தொழில் முனைவோருக்கு பண மற்றும் அனுபவ மூலதனத்தை வழங்குவதன் மூலம் அவர்களை பல்வேறு முதலீட்டாளர்களுடன் அவர்களை இணைக்கிறது.

அடல் இன்குபேஷன் சென்டர் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை ஏற்படுத்தும் விதமான ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும்.இது அடல் இன்னோவேஷன் மிஷன்  திட்டத்தின் நிதி ஆயோக்கின் கீழ் நிறுவப்பட்டது ஏஐசி ரைஸ் SDGகளை தழுவி, நிலையான சமூக மாற்றத்தை உருவாக்க புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

இயற்கையைப் பாதுகாப்பதன் மூலமும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலமும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நிலைத்தன்மை இலக்குகளின் கீழ் ஏஐசி ரைஸ் செயல்படுகிறது என்று தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments