9வது வார்டு வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு...
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 9வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்ஆதரவு திரட்டினார்.
9வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியத்தில் வாக்குகளை சேகரித்தார். தேர்தல் பொறுப்பாளர்கள், எம்.எஸ்.சுகுமார், குமரேசன், திமுகவினர் யுவராஜ்,தேவராசன், இளம்பரிதி, சிவராமன், சிலம்பரசன் உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments