Breaking News

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் நாளை மக்கள் குறை தீர் முகாம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வழக்கம்போல் நாளை நடைபெறும் என்று ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். மா. ஆர்த்தி  அறிவிப்பில், 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு. அம்மனுக்கள்  சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. 

தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கு பெற்றதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம். வருகிற 28-02-2022 (திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் நடைபெறும் என்றும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments

Thank you for your comments