Breaking News

முத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை வாடகைதாரரிடமிருந்து சனிக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள முத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2142 சதுர அடி இடம் ரயில்வே சாலையில் உள்ளது.இந்த இடத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள இடத்தை மட்டும் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.மேலும் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகையும் செலுத்தாமல் இருந்து வந்தனர்.


இதனை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மீட்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோயில் நிலங்களுக்கான வட்டாட்சியர் வசந்தி ஆகியோர் ரூ.3 கோடி மதிப்பிலான இடத்தை மீட்பதற்காக வந்த போது சம்பந்தப்பட்ட வாடகைதாரர் அந்த இடத்தை பூட்டி அதன் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் ரூ.3 கோடி மதிப்பிலான முத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சொத்து மீட்கப்பட்டுள்ளது.

படவிளக்கம்..கோயிலுக்கு சொந்தமான இடத்தினை பூட்டி அதன் சாவியை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த வாடகைதாரர்கள்

No comments

Thank you for your comments