காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக சட்டப்பேரவை மதீப்பீட்டு குழுவினர் ஆய்வு
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு ஆய்வு குழுவினர் 26-02-2022 அன்று பல்வேறு இடங்களில் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு ஆய்வு குழு டி.ஆர்.பி ராஜா எம்எல்ஏ தலைமையில் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26/02/2022 அன்று காலை 10 மணிக்கு ஆய்வுக் குழுவினர் பணிகளை ஆய்வு செய்ய தொடங்கினர்.
காஞ்சிபுரம் நகரில் மையத்தில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாய் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் சீரமைக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு அங்கு நிலவிய குறைகளை உடனடியாக சரிசெய்ய குழுவினர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும் காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட பட்டு பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு அங்கு செயல்படும் தனியார் நிறுவனங்களை ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு சந்தேகங்களை கேட்டு அறிந்தனர். மேலும் அவர்களுக்கு தேவைகளை குறிப்பெடுத்துக்கொண்டு ஆய்வு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதேபோல் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments