கோயமுத்தூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
கோயமுத்தூர்:
கோயமுத்தூர் மாநகராட்சி 7, நகராட்சி 33 ,பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பொள்ளாச்சி ஈச்சனாரி, குனியமுத்தூர், மசக்காளிபாளையம், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
குனியமுத்தூர், மசக்காளைபாளையம், ஈச்சனாரி பகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும்.போட்டியிடும் பகுதிகளில் மக்களின் தேவைகளை முழுவதுமாக தெரிந்து வாக்குறுதிகளை கொடுக்க வேண்டும்.
கடந்த 8 மாத காலத்தில் நகைக்கடன்தள்ளுபடி, பெண்களுக்கு இலவசப்பேருந்து, இல்லம்தேடி கல்வி என தமிழக அரசு கொடுத்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேணடும். ஒற்றுமையாக களப்பணியாற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
அறிமுகக்கூட்டத்தில் மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் நா.கார்த்திக், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலைசேனாதிபதி, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாகவுண்டர், வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன், தெற்கு பொறுப்பாளர் வரதராஜன் மாவட்ட மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments