Breaking News

வீட்டு வாசலில் கோலம் போட்டு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த தாய்மார்கள்... விழிபிதுங்கி நிற்கும் கட்சியினர்...

காஞ்சிபுரம்:

வீட்டு வாசலில் சுயேட்சை வேட்பாளர் பெயரை கோலம் போட்டு தங்களின் ஆதரவை  தெரிவித்த தாய்மார்கள் விழி பிதுங்கி நிற்கும் இதர கட்சியினர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறத்தில் வார்டில் உள்ள மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் வாடி போயிருந்தனர்.



 நகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து தவமிருந்தனர் மிகுந்த அவதிக்கு உட்பட்டிருந்த காஞ்சி நகர மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்த பொழுது அரசியல்வாதிகளை தேடிச்செல்லும் நிலையில் அரசியல்வாதிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் கப்பம் கட்ட பலநூறு லட்சங்களை தொடர்ச்சியாக செலவு செய்தனர். இதனால் பெரும் ஆதங்கத்தில் காஞ்சி நகர மக்கள் இருந்தனர்.

தற்போது நடைபெறக்கூடிய இந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்தப் பத்தாண்டுகளில் அடிப்படை வசதிகளுக்காக பல இளைஞர்கள் சமூக வலைதள மூலமாகவும் ஆர்டிஐ மூலமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சென்று அடிப்படை வசதிகளுக்காக குரல் கொடுத்ததன் காரணமாகவும் பல இளைஞர்கள் காஞ்சி நகர மக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். 

அந்த வகையில் 44வது வார்டில் உள்ள வேதாச்சலம் நகர் அரசு அலுவலர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் வசதிபடைத்த முதியோர்கள் என அதிகம் வசிக்ககூடிய ஒரு பெரும் பகுதி ஆகும். இந்த வார்டில் அடிப்படை வசதிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் இவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அடிப்படை கட்டமைப்பு என்பது பெரியதாக முன்னேற்றம் அடையவில்லை மழைநீர் வடிந்து செல்லும் கால்வாய் கூட தூர்வார வில்லை மழை காலங்களில் மழைநீர் நகருக்குள் தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசும் குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்காக்கள் முறையாக பராமரிப்பதில்லை விஷ ஜந்துக்கள் பூங்காவில் வலம் வரும் சூழலில் கடந்த 10 ஆண்டுகளில் அந்த வார்டு பகுதி மக்கள் முகம் சுளித்து இருந்தார்கள்.

அப்போது அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சிக்கு அப்பகுதி மக்களின் சார்பாக தனது 24 வயதில் இருந்தே  குரல் கொடுத்து வந்தவர் சண்முகம் மற்றும் அவரது நண்பர்கள் நோய்த்தொற்று காலத்தில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர்களுக்கு உணவு அளிப்பது தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்வது.. மழைநீர் கால்வாய் தூர்வாரி தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவது... மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் உடனடியாக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது என அந்த ஏரியாவுக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை சண்முகமும் அவரது நண்பர்களும் செய்து கொண்டிருந்திருக்கிறார். 

தாய் தந்தை இல்லாத சண்முகத்தை அப்பகுதி மக்கள் தங்கள் பிள்ளையாகவே பார்த்து வருகின்றனர். இந்த வார்டு முழுவதுமே தனது வீடு என்ற எண்ணத்தில் இருந்த சண்முகத்தை அப்பகுதி மக்கள் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அறிவுறுத்தியுள்ளனர். 

அதனடிப்படையில் தற்போது அந்த பகுதியில் அதிமுக திமுகவிற்கு எதிராக பெரும்பகுதியான மக்களின் ஆதரவோடு சுயேச்சையாக நிற்கிறார்.

இதனால் கலக்கமடைந்த இரு கட்சியினரும் சண்முகத்தை தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள் அதற்காக கணிசமான தொகையும் கொடுக்க முன்வருகிறார்கள்.. மறைமுகமான மிரட்டலுக்கும்  பணத்திற்கும் எதற்கும் அசைந்து கொடுக்காத சண்முகம் தேர்தலிலிருந்து வாபஸ் வாங்கவில்லை இந்த தகவல் வேதாசலம் நகர் பகுதியில் உள்ள தாய்மார்களின் கவனத்திற்கு சென்றது.

இதனடிப்படையில் தங்களின் வீட்டு வாயிலில்  எங்கள் ஓட்டு சண்முகத்திற்கு தான் என்கின்ற வாசகத்தோடு  தாய்மார்கள் கோலம் போட்டு சுயேட்சை வேட்பாளர் சண்முகத்திற்கு தற்போது பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பிரச்சாரத்திற்கு அடுத்தடுத்து வார்டு தெருக்களில் நுழையக்கூடிய அதிமுக திமுக போன்ற இதர கட்சிகள் அந்த தெரு முழுவதும் எங்கள் ஓட்டு சண்முகத்திற்கு தான் என்று அந்த வீடுகளில் தாய்மார்கள் கோலம் போட்டு இருப்பதை பார்த்து செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்

No comments

Thank you for your comments