வாலாஜாபாத் வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
வாலாஜாபாத்,பிப்.16:
வாலாஜாபாத் பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்கள் முழுவீச்சாக செயல்படுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 17 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் பொழுது வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வாக்காளர்கள் வந்து செல்லும் வசதிகள் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் வாக்குச்சாவடி மையங்களை கிருமி நாசினி தெளித்து எவ்வாறு தூய்மைப்படுத்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் அலுவலர்களிடம் வழங்கினர்.
இந்த ஆய்வின் பொழுது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments