Breaking News

இன்று மாலை வருகை தரும் வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி கண்டுகளிக்க மக்களுக்கு அழைப்பு...

காஞ்சிபுரம்:

விடுதலைப் போரில் தமிழகம் - அலங்கார ஊர்தி 17.02.2022 வியாழக்கிழமை அன்று பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ள வாகனத்தை அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்க வாருங்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி  அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் என தெரிவித்திருந்தார்கள். அதன்படி, வ.உ.சி.அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகள் இன்று(16.02.2022) மாலை காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான கரசங்கால் கிராமத்தில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கலைப்பண்பாட்டுத் துறையினரின் இசைப் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிறப்பான வரவேற்புடன் வரவேற்கப்பட்டு, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பாதுகாப்பு வசதிகளுடன் நாளை(17.02.2022) காலை முதல் மாலை வரை காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

மேலும் கலைப்பண்பாட்டுத் துறையினர் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பள்ளி கல்வி துறை சார்பில் விடுதலைப் போராட்டத்தில் “தமிழகத்தின் பங்கு” என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியர்களின் வீர உரையாடல், விளையாட்டு துறை சார்பில் சிலம்பாட்டம் மற்றும் யோகா போன்ற பல்வேறு விதமான கண்கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் முகக்கவசம் அணிந்து வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டு கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த அலங்கார ஊர்தியில் மகாகவி பாரதியார். "செக்கிழுத்த செம்மல்" வ.உ.சிதம்பரனார் தியாகி சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். கர்ம வீரர் காமராஜர். இரட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன். தீரன் சின்னமலை, கொடி காத்த திருப்பூர் குமரன், திருச்சிராப்பள்ளி வ.வே.சு.ஐயர், கண்ணியமிகு காயிதே மில்லத், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாக சீலர் கக்கன் ஆகியோர் உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments