Breaking News

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் மோ.ராஜாமணி அம்மாள் மறைவு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் - தமிழக குறு - சிறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 83) அவர்கள் நேற்று இரவு 10.00 மணியளவில் காலமானார் என்பதை அழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நினைவில் வாழும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் தா.மோகலிங்கம் அவர்களின் மனைவி ஆவார். மறைந்த ராஜாமணி அம்மாளுக்கு தா.மோ.அன்பரசன் - தா.மோ.எழிலரசன் ஆகிய இரு மகன்களும், கனிமொழி, பவானி, கண்மணி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

அன்னாரது உடல் குன்றத்தூரில் உள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  

இன்று மாலை அவரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. குன்றத்தூர் இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

No comments

Thank you for your comments