ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக காங்கிரஸ் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மாநகராட்சி 36 வது வார்டில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அதற்கான தேர்தல் பணிமனை இன்று 11/02/2022 காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்கள் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து சுல்தான்பேட்டை, கொங்கலம்மன் கோயில் வீதி, கிழக்கு கொங்கலம்மன் கோவில் வீதி, மேற்கு கொங்கலம்மன் வீதி, ஹசன் வீதி, ஆர்.கே.வி.ரோடு மற்றும் புதுமஜீத் வீதி ஆகிய இடங்களில் வாக்குகளை கேட்டு வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 36 வது வார்டு செயலாளர் அ.சாகுல் அமீது, நிர்வாகிகளான முகம்மது பாபு, ஹரிஹரன், முஹபத்துல்லாஹ், பாரூக் அலி (அக்குபஞ்சர்), முன்னாள் மாமன்ற உறுப்பினர் பாத்திமா சாகுல், எலக்ட்ரீசியன் பாபு என்கிற முஸ்தபா, கமால் பாஷா, ஆறுமுகம், பாபு என்கிற பாரூக் அலி அன்வர் கான், லியாகத் அலி, எம்.உசேன், விடுதலை சிறுத்தைகளின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை அமைப்பாளர் வெள்ளை ஜாபர், நிர்வாகி பூபதி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் பாபு ஷஹின்ஷா, மாவட்ட செயலாளர் சபிக் அலி, காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், மூன்றாம் மண்டல தலைவர் டி.திரு செல்வம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்களான வி.எஸ். ஈஸ்வரமூர்த்தி, பாஸ்கர் ராஜ், மாவட்ட பொது செயலாளர்களான கராத்தே யூசுப், இரா கனகராஜ், ஏ.வின்சென்ட், ஈரோடு மாநகர் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என்.பாஷா, ஐ.என்.டி.யூ.சி.வின் கண்ணன், நிர்வாகிகளான கே.ஜெ.டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஜனனி திருமணமண்டபத்தின் உரிமையாளர் செந்தூர் ராஜகோபால், மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஆர் சுதா, லயன் முகமது இப்ராஹிம், நான்காம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், ராஜாஜிபுரம் சிவா, சக்தி குமரேசன், அல்டிமேட் தினேஷ், அஹமது, மாப்பிள்ளை மீரான், கார்த்தி, வெற்றிச்செல்வன் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில எஸ்சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சின்னசாமி, பிரவீன் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.
No comments
Thank you for your comments