Breaking News

காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்த இபிஎஸ்... காட்மான பேச்சு

 காஞ்சிபுரம்

காவல்துறையினர் நடுநிலையோடு செயல் படுங்கள்.... தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்... கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் சட்டத்திற்குப் புறம்பாக ஜனநாயகத்திற்கு புறம்பாக எந்த காவல்துறை அதிகாரியாகட்டும், அரசு அதிகாரி ஆகட்டும் செயல்பட்டால் நிச்சயம் அதற்குண்டான பலனை அடைவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்து காட்டமாக பேசினார்.

திமுக அரசு உங்களைக் காப்பாற்றாது. திமுக அரசை நம்பி இறங்கினால் உங்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.  கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் சட்டத்திற்குப் புறம்பாக ஜனநாயகத்திற்கு புறம்பாக எந்த காவல்துறை அதிகாரியாகட்டும், அரசு அதிகாரி ஆகட்டும் செயல்பட்டால் நிச்சயம் அதற்குண்டான பலனை அடைவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்து பேச்சு.

காஞ்சிபுரம் மாவட்ட  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி  பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகள், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீ பெரும்புதூர் பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, 

திமுக ஆட்சியால் எந்த நன்மையும் மக்களுக்கு கிடைக்கவில்லை முதலமைச்சர் தன்னை ஒரு விளம்பர பிரியர் ஆக மட்டுமே பார்க்கிறார். தினசரி பத்திரிகையிலும், டிவியிலும் அவர் குறித்த செய்தி வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

மக்களுக்காக எந்த ஒரு பயனும், எதுவும் செய்யவில்லை  ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள்... காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். 

நடுநிலையோடு செயல்பட வேண்டும், நானும் முதலமைச்சராக இருந்தேன்.  காவல் துறையை நிர்வகித்தேன்  அப்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

இன்றைய தினம் காவல்துறையை சேர்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபடும் சூழல் இருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். இல்லாவிட்டால் திமுக அரசு உங்களைக் காப்பாற்றாது. திமுக அரசு நம்பி இறங்கினால் உங்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்...

கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும்,அப்படி வரும் போது ஜனநாயகத்துக்கு புறம்பாக எந்த காவல்துறை அதிகாரியும் அரசு அதிகாரியும் செயல்பட்டால் நிச்சயம் அதற்குண்டான பலனை அடைவார்கள்.

நான் இப்போது இருக்கின்ற முதலமைச்சர் பொம்மை முதலமைச்சர் போல் இருக்க மாட்டேன், எந்தக் காரியம் எடுத்தாலும் துணிச்சலோடு எடுப்பேன். ஆகவே  காவல்துறை அதிகாரியாக இருக்கட்டும், அரசு அதிகாரியாக இருக்கட்டும்  நேர்மையுடன் செயல்படுங்கள் என எடப்பாடி பழனிச்சாமி காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார்.

No comments

Thank you for your comments