Breaking News

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமதி ஆபிதாவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு...

காஞ்சிபுரம்

தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமதி ஆபிதா அவர்களுக்கு ஏணி சின்னத்தில் ஆதரித்து 20வது வார்டுக்கு உட்பட்ட விஜய் கிராமணி தெரு, ஐதர்பேட்டை தெரு, பானக்கார தெரு, ரெடிபேட்டை தெரு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 இதில் தேர்தல் பொறுப்பாளர் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.பி.பூபாலன், திமுகவை சேர்ந்த ஜாபர், இளங்கோவன், காசிம் பாஷா, ரிஸ்வான், ஹரி, அன்சர், சரவணன், அல்தாப், சொயேப், பாபு,ராஜி, ஜாகீர்,உள்ளிட்ட திமுகவினரும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் மக்கள் ஆதரவு பெருகி கவனம் ஈர்க்கப்பட்டனர். மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளார்...


No comments

Thank you for your comments