Breaking News

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அரியவகை பறவை மீட்பு

கோவை:   

 கோவை அரசு ஆஸ்பத்திரியில் காயத்துடன் போராடிய அரிய வகை பறவை மீட்கப்பட்டது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அரியவகை பறவை ஒன்று அடிபட்டு கால்கள் செயல் இழந்து எறும்புகள் சூழ்ந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து உடனடியாக  விலங்குகள் மீட்பு படை விவேக் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவர் அந்த பறவையை மீட்டு சுத்தம் செய்தார். பின்னர் பறவையை பத்திரமாக  கோவை வனத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் அனிமல் ரெஸ்க்யூயர்ஸ் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக ஒப்படைத்தார். 

அந்த பறவையின் பெயர் வெள்ளை அரிவாள் மூக்கன் அல்லது கருந்தலை அரிவாள் மூக்கன் என்று அழைக்கப்படுகிறது. அரிவாள் போன்று நீண்டு வளைந்த அலகையும், வெள்ளை நிறத்தில் உடலையும் கொண்ட நீர்ப்பறவை ஆகும்.

இந்தியாவில் தமிழ் நாட்டு பகுதியை சார்ந்த பறவையான இது இந்திய துணைக் கண்டப்பகுதி, தென் மேற்கு ஆசியப் பகுதி, வடக்கு இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, ஜப்பான் போன்ற கீழ்திசை நாடுகளில் பரவியுள்ளது. 

பெரிய மரக்கிளைகளின் மேல் கூடுகட்டி 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். 4 நாட்களில் அந்த பறவை பூரண குணமாகும் என விலங்குகள் மீட்பு படை விவேக் தெரிவித்தார்

No comments

Thank you for your comments