காவல் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு
டி.என்.பாளையம், பிப்.1-
பங்களாபுதூர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவர் தனியார் கல்லூரியில் விரிவுரை யாளராகப் பணியாற்றி வருகிறார். நடராஜிக்கும் அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தாராக இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட குமரேசன் என்பவருக்கும் இடையே வண்டிபாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடராஜ் அமைத்து இருந்த வேலி கற்களையும், கண்காணிப்பு கேமிராக்களையும் 10-க்கும் மேற்பட்ட கும்பல் உடைத்து எரிந்தனர்.
இதுதொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் குமரேசன் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில், அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நடராஜ் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு மதியம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டி.எஸ்.பி சண்முகம் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னி லையில் நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து புகார்தாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பங்காளாபுதூர் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.
No comments
Thank you for your comments