Breaking News

12 ம் வகுப்பு பள்ளி மாணவன் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

வேலூர் :

வேலூர் மாவட்டம்   குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்த பாலாஜி (17)  தட்டப்பாறை பகுதியிலுள்ள தட்டப்பாறை மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனிடையே நேற்று மாலை பள்ளிக்குச் சென்று வந்த மாணவன் பாலாஜி நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த நிலையில் இன்று, காத்தாடிகுப்பம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய படி சடலமாக மாணவன் பாலாஜியின் உடல் மீட்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மாணவனின் தற்கொலை குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments