Breaking News

6வது வார்டு உட்பட்ட பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு...

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சி 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் திருமதி.பிரியா குழந்தைவேலுவுக்கு ஆதரித்து,    6வது வார்டுக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் சன்னதி தெரு, தெற்கு கிருஷ்ணன் தெரு, வடக்கு கிருஷ்ணன் தெரு, பவளவண்ணர் தெரு, தந்தை பெரியார் தெரு, ரயில்வே ரோடு காம்பவுண்ட், நகராட்சி சந்து உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  உதயசூரியன் சின்னத்திற்கு திமுகவினர் வாக்கு சேகரித்தனர். 

இதில் தேர்தல் பொறுப்பாளர் எஸ்.பி. பூபாலன், பார்த்திபன், ஆனந்தன், திமுக 6 வது வட்ட கழக பொறுப்பாளர் திலகர், காங்கிரஸ் ஆர்.வி.குப்பன், சண்முகம், வெங்கடேசன், பாலவிநாயகம் காங்கிரஸ் மணிகண்டன், வேல்முருகன், மதிமுக வெங்கடேசன், மணிவண்ணன், குழந்தைவேலு, முரளி, சுரேஷ், அன்பநிதி, கலாநிதி உள்ளிட்ட திமுகவினரும் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


No comments

Thank you for your comments