ரஷ்ய ராணுவத்தினர் சுமார் 5300 பேர் உயிரிழப்பு
கீவ் :
ரஷ்யாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் பலியாகி உள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.
பிப்.24 முதல் பிப்.28 வரை, காலை 6.00 மணி வரை
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 5300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் 191 பீரங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர 816 கவச வாகனங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. வாகனங்கள் 291, தொட்டிகள் 60, UAV கள் 3, கப்பல்கள்/ மோட்டார் படகுகள் 2, AAD சொத்துக்கள் 5 வீழ்த்தப்பட்டுள்ளன.
மேலும், ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது.
Defence of Ukraine facebook info:
Estimated losses of the enemy for the period from FEB 24 to FEB 28, as for 6.00 a.m.:
No comments
Thank you for your comments