Breaking News

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை:

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தி.மு.க.. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியதாக தண்டையார்பேட்டையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.ஜெயக்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தொடர்ந்து ஜெயிலிலேயே இருக்கிறார்.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டி.ஜெயக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

8 கிரவுண்ட் நிலத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்து விட்டதாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.  பின்னர் அவருக்கு மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் பிறப்பித்து  ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Thank you for your comments