51 வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தலைமை கழகம் அறிவித்துள்ளதை தொடர்ந்து போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் காஞ்சிபுரம் நகராட்சியில் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பாக 33 வார்டுக்கு ஷோபனா கண்ணன், 5 வது வார்டுக்கு இலக்கியா சுகுமார், 39 வது வார்டுக்கு ஜெகநாதன், 8 வது வார்டுக்கு டாக்டர் S.சூர்யா சோபன் குமார், 43 வது வார்டுக்கு எஸ் மோகன், 42 வது வார்டுக்கு மகேஸ்வரி காமராஜ், 18 வது வார்டுக்கு R.மல்லிகா ராமகிருஷ்ணன், 15 வது வார்டுக்கு வி.லதா வெங்கட்ராமன் ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்
No comments
Thank you for your comments