பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் அனுசரிப்பு
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு மற்றும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுகவை தோற்றிவித்தவரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, மற்றும் அதிமுக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதே போல் காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் மற்றும் திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
No comments
Thank you for your comments