Breaking News

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திருவள்ளூர், பிப்.10-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் தற்போது கஞ்சா விற்றதாக மூன்று நபர்கள் திருமுல்லைவாயில் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று நபர்களை கைது செய்தனர்.

திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்களுக்கு திருமுல்லை வாயில் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து திருமுல்லைவாயில் கிருஷ்ணா கால்வாய் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அம்பத்தூர் மங்கள புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விடியல் வயது (27) திருமுல்லைவாயல் சோழம் பேட்டையைச் சேர்ந்த மனோ வயது (21) திருமுல்லைவாயில் தென்றல் நகரை சேர்ந்த  பாலாஜி வயது (22 )ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பதை பார்த்த காவலர்கள் கைது செய்தனர்.

 

இவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் அவர்கள் வழக்கு தொடர்ந்து இவர்களுக்கு யார் யாரிடம் தொடர்பு இருக்கிறது என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர் இதேபோல் பட்டாபிராம் ஆவடி பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

No comments

Thank you for your comments