Breaking News

அரசாணை வெளியிடுவதில் இந்த அவசரம் என்னவானது? - தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய ராமதாஸ்

சென்னை:

தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி வரும் 16-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் அவரவர் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிர்ப்பதற்கான இந்த அவசரம் வரவேற்கத்தக்கது!

ஆனால், தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்,  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50%  மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் இந்த அவசரம் என்னவானது?

தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்படும் என்று நம்பி, தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், முழுக்கட்டணத்தையும் செலுத்தும்படி தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வர், எங்கே போவார்கள்!

தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும்!

இவ்வாறு கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments