இன்று மாலை வருகை தரும் வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி கண்டுகளிக்க வேலூர் மக்களுக்கு அழைப்பு...
வேலூர்:
சென்னையில் நடைபெற்ற 73வது குடியரசுத் தின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியர் அலங்கார ஊர்தி வேலூர் மாவட்டத்திற்கு வருவதை பொதுமக்கள் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை குடியரசு தினவிழாவில் (2022) பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு பிப்ரவரி 13 ஆம் தேதி மாலை வர உள்ளது.
இந்த அலங்கார ஊர்தியை மாவட்ட எல்லையான அகரம்சேரி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலை நிகழ்ச்சியுடன் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 14.02.2022 அன்று வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், கழனிபாக்கம் ஊராட்சி மற்றும் 15.02.2022 அன்று காட்பாடி ஒன்றியம், மேல்பாடி ஊராட்சி, வள்ளிமலை பகுதியிலும் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை பொதுமக்களும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களும் கொரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பாக சிலம்பாட்டம், யோகா போன்ற நிகழ்ச்சிகளும், மகளிர் திட்டம் துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கலந்து கொள்ளும் கிராமய கலை நிகழ்ச்சிகளும், இணை இயக்குநர் கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் இந்த அலங்கார ஊர்தியினை கல்லூரி , பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் அந்தந்த வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலம் அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தும் இடத்தில் முகக் கவசம், கிருமி நாசினி மற்றும் வெப்பநிலைமானி பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
🔥குடியரசு தின விழாவில் ஒய்யாரமாக ஊர்வலம் வந்த மத்திய அரசு நிராகரித்த தமிழக அலங்கார ஊர்தி
No comments
Thank you for your comments