20வது மாமன்ற திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நாடாளுமன்ற சட்மன்ற உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது மாமன்ற திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நாடாளுமன்ற சட்மன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகின்ற பிப்ரவரி 19 அன்று தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலானது நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளர் ஆபிதா அவர்களுக்கு ஏணி சின்னத்தில் ஆதரித்து 20வது வார்டுக்கு உட்பட்ட பாக்ரா பேட்டை தெரு, ரெடிப்பேட்டை தெரு,ஐதர்பேட்டை தெரு,வெங்கடேச பாளையம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்டோர் ஏணி சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
இதில் வட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் எஸ்.பி.பூபாலன், ஏ.எஸ்.முத்துசெல்வம் மற்றும் 20வது வட்டத்தை சேர்ந்த திமுகவினர் காசிம் பாஷா, இளங்கோவன், ஜாபர், மார்க்கெட் தன்ஸ், உமாசந்தர், தேவராஜ், உள்ளிட்ட திமுகவினர் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அல்லாபாகாஷ்,அஸ்லாம் பாஷா, இம்ரான் உள்ளிட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments