17வது வார்டு வேட்பாளர் வி.சசிகலாவை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு...
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக
நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 17வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் வி.சசிகலா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA கலந்துகொண்டு 17வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியத்தில் வாக்குகளை சேகரித்தார்.
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாணவரணி செயலாளர் எழிலரசன் MLA,தேர்தல் பொறுப்பாளர்கள் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், சி.வி.எம்.அ.சேகரன், ஏ.எஸ்.முத்துசெல்வம்,டி.குமார், உள்ளிட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments