மேலும் 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு
புதுடெல்லி :
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய - சீன எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த மோதலை தொடர்ந்து, இந்தியாவை உலவு பார்க்கும் விதமாக பல்வேறு செயலிகள் உள்ளதாக கூறி கடந்த 2020 ஜூன் 29-ம் தேதி டிக்டாக் உட்பட 58 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் மேலும் பல சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசுதடை விதித்தது.
இந்நிலையில், பியூட்டி கேமரா, ஸ்வீட் கேமரா ஹெச்டி, புயூட்டி மேகரா செல்பி, பேஸ் பூஸ்டர், ஆப் லாக்கர், டுயல் ஸ்பேஸ் லைட் உள்பட மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மேலும் 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 54 சீன செயலிகளுக்கும் தடை விதிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை இந்திய அரசு விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 200-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
The 54 Chinese apps include Beauty Camera: Sweet Selfie HD, Beauty Camera - Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite.
— ANI (@ANI) February 14, 2022
No comments
Thank you for your comments