Breaking News

வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரித்தார் 35 வது வார்டு வேட்பாளர் கிரிஜா...

காஞ்சிபுரம்:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளிலும் திமுக அதிமுக பாமக பாஜக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

படவிளக்கம் : 35 ஆவது வார்டு நாராயண பாளையம் பகுதியில் போட்டியிடும் திமுக ஆதரவு பெற்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் கிரிஜா கொசுவலை போர்த்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.

நேற்று விடுமுறை தினம் என்பதால் தொழிற்சங்க பிரதிநிதிகள் , கட்சி நிர்வாகிகள்  படை சூழ வலம் வந்து வாக்கு சேகரித்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குபட்ட 35 வார்டு பகுதியில் திமுக கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கிரிஜா போட்டியிடுகின்றார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகரில் வரும் கொசு தொல்லையால் பல்வேறு நோய்களில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டில் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் காக்கப்படும் நிலவும் தேங்கிநிற்கும் கழிவுநீர் மற்றும் குடிநீர் தொட்டிகள் அருகே முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு கொசு ஒழிப்பு முன்னணி அளிக்கப்படும் என கூறி கொசுவலையை போர்த்தியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அப்பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் எனவும் முக்கியமாக குடிநீர் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் தனது தொண்டர்களுடன் ஈடுபட்டு வருகிறார்.


No comments

Thank you for your comments