புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி 05-01-2021 அன்று வெளியிட்டார்.
ஆண்டுதோறும் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஜனவரி மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் எம்.ஆர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி) , உத்திரமேரூர் ,காஞ்சிபுரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
அதன் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 05-01-2022 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 6 லட்சத்து 56 ஆயிரத்து 760 ஆண் வாக்காளர்களும்,6 லட்சத்து 92 ஆயிரத்து 996 பெண் வாக்காளர்களும்,177 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரத்து 933 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் அதிபடியாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 954 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 62 வாக்காளர்களும், ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 3லட்சத்து 70 ஆயிரத்து 490 வாக்காளர்களும், காஞ்சிபுரத்தில் 3லட்சத்து 15 ஆயிரத்து 427 வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும் இந்த இறுதி வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும், பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் எம் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments