உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்
சேலம்:
சேலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் எம்எல்ஏ வாழ்த்துரை வழங்கி நலத்திட்ட உதவிகளை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
மேலும், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் ஏ.ராமச்சந்திரன் எஸ்.டி கலையமுதன் ஜெ.ஜெயக்குமார் சேலம் மாவட்ட தொழில் முனைவோர் சங்கம் ரா.பழனியப்பன் தலைவர் ஏ எம் ராஜ்குமார் செயலாளர் எஸ் டீ கே தர்மராஜ் பொருளாளர் சி நடராஜன் பொதுச் செயலாளர் பி ரவி போன்றவர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்கள்.
No comments
Thank you for your comments