Breaking News

07-01-2022 அன்று உரிமை கோரப்படாத 21 இரு சக்கர வாகனங்கள் ஏலம்...

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட  உரிமை கோரப்படாத 21 இரு சக்கர வாகனங்கள் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் 07.01.2022ம் தேதி காலை 11.00 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. 

மேற்படி ஏலத்தேதிக்கு முன்பு நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மூலமாக மேற்படி உரிமை கோரப்படாத வாகனங்களை காலை 10.00 மணிமுதல் மாலை 05.00 மணி வரை அனுமதி பெற்று பார்வையிடலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ள அனைவரும் முன் பனத் தொகை ரூ.5000/.- (ரூபாய் ஐந்தாயிரம் ) செலுத்தி ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு  ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.




No comments

Thank you for your comments