வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கோவை, ஜன.6-
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், இளங்கோ, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
01.01.2022ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 01.11.2021 முதல் 30.11.2021 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (05.01.2022) வெளியிடப்பட்டது.
தற்போது 05.01.2022 தேதியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 15,40,901 ஆண்கள், 15,91,654 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 573 ஆக மொத்தம் 31,33,128 வாக்காளர்கள் உள்ளனர்.
18-19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 42,266 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான தொடர் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக இணையதளம் மூலமாக (ONLINE) மனுக்களை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக https://www.nvsp.in/ எனும் இணைய முகவரியின் வாயிலாகவோ அல்லது Voter Helpline App எனும் ஆண்ட்ராய்ட் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nvsp.in/
No comments
Thank you for your comments