Breaking News

கபீர் புரஸ்கார் விருது 2022

கோவை, ஜன.6-

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவின்போது சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான "கபீர் புரஸ்கார் விருது” தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. 

இவ்விருதானது மூன்று அளவுகளில் தலா ஒருநபர் வீதம் மூவருக்கு முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 

தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை, வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்களலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில்) இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். 

இவ்விருதானது, ஒருசாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிறசாதி, இனவகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

எனவே, 2022-ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு உரியதகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன் விவரக் குறிப்பு (தமிழ் மற்றம் ஆங்கிலத்தில்), உரியவிவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 10.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்   கேட்டுக்கொள்கிறார்.

No comments

Thank you for your comments