வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வேலூர், ஜன.5-
வேலூர் மாவட்டத்தில் கடந்த 01.11.2021 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இவ்வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 01.01.2022 அன்று 18 வயது அடைந்தோர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக 01.11.2021 முதல் 30.11.2021 வரை படிவங்கள் பெறப்பட்டது, இந்த இடைப்பட்ட காலத்தில் 13.11.2021, 14.11.2021, 20.11.2021, 21.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய ஆறு விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடைப்பெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் கீழ்க்கண்டவாறு படிவங்கள் பெறப்பட்டது.
இதனை https://www.nvsp.in/ என்ற இணையதள முகவரியிலும் பார்க்கலாம். மேலும், வெளியிடப்படும் இப்பட்டியலில் ஐந்து தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் வருமாறு:
மேலும், 06.01.2022 முதல் தொடர் சுருக்க திருத்த முறை அமல்படுத்தப்படுவதால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள படிவங்கள் அளிக்க விடுப்பட்ட நபர்கள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக படிவங்களை அளிக்கலாம். மேலும், படிவங்களை https://www.nvsp.in/ என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, அலைபேசி Voter Helpline App மூலமாகவோ அளிக்கலாம் என்று வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments