முக கவசம் அவசியம்... பாகாயம் போலீஸார் விழிப்புணர்வு
வேலூர் :
முக கவசம் அணியாமல் நடமாடக் கூடாது என்றும் முக கவசம் அவசியத்தை பாகாயம் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வேலூர் மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா தலைமையிலான போலீஸார், இன்று காலை பாகாயம் ஜங்சன் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி இலவசமாக முகக்கவசம் வழங்கி அறிவுறுத்தி அனுப்பினார்.
பின்னர் ஆய்வாளர் சுபா பேசுகையில், கொரோனா மூன்றாவது அறை வேகமாக பரவுவதால் மக்கள் வெளியே வரும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், முக கவசம் இன்றி வெளியே வரக்கூடாது, அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் இதன் மூலம் மூன்றாவது அலையை தவிர்க்கலாம் என்று அறிவுறுத்தினார்.
அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட வேண்டும், 15 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் இவற்றின் மூலம் கொரோனாவின் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர் பேசினார். இந்த விழிப்புணர்வில் உதவி ஆய்வாளர் ரவிச் சந்திரன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments