Breaking News

“மகளிர் சக்திவிருது” பெற விண்ணப்பிக்கலாம் - Nari Shakti Puraskar

கோவை, ஜன.28-

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “மகளிர் சக்திவிருது" (நாரி சக்தி புரஸ்கார்) அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள், வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, துன்புறுத்துதல், பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு மகளிர் சக்தி விருது (நாரி சக்தி புரஸ்கார்) என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

இவ்விருதானது இரு பிரிவினருக்கு வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரூ.1,00,000/- ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு ரூ.2,00,000/- காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும் தகுதி வாய்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் 31.01.2022 அன்று 5.00 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  கேட்டுக்கொள்கிறார்.

Click here  https://awards.gov.in/ 

No comments

Thank you for your comments