அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கும் திட்டம்
வேலூர், ஜன.28-
வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் மதிய உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள் அதுபோல வேலூர் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டமாக அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கும் சேவை திட்டம் துவங்கப்பட்டது.
ஜெம்ஸ் ரோட்டரி சங்க தலைவர் சங்கர் அவர்கள் தலைமையில் மதிய உணவு வழங்கும் விழா நடைபெற்றது முன்னாள் ஜெம்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.தினேஷ் குமாருடைய தந்தை கே.சுந்தரம் தாயார் பி.உமாராணி திருமண நாளை முன்னிட்டு சேண்பாக்கம் பகுதியில் உள்ள அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு தொடர் திட்டமாக வழங்கி துவக்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர் மற்றும் மாவட்ட செயலாளர் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் எம்.கோபிநாத் செயலாளர் எம்.ஞானசேகரன் பொருளாளர் ஜே.கோபால் இயக்குநர் சங்க பணி ஸ்ரீதரன் மற்றும் அன்னை தெரசா இல்ல கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டனர்
இந்த இல்லத்தில் உள்ள முதியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர்களாக உள்ளனர். மனநிலை நன்கு உள்ளவர்களையே பெற்ற பிள்ளைகள் கைவிட்டு துரத்தும் சூழ்நிலையில் இதுபோன்று மனநிலை பாதிக்கப்பட்ட முதியோர்களை பேணி பராமரிப்பதில் அன்னை தெரசா முதியோர் இல்லம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஜேம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இதுபோன்று தொடர் மதிய உணவுகளை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments