மது விற்பனை (Dry Day) இல்லாத நாளாக அனுசரிக்க உத்தரவு
ஈரோடு, ஜன.12-
ஈரோடு மாவட்டத்தில் வருகிற திருவள்ளுவர் தினம் (15.01.2022) வள்ளலார் நினைவு தினம் (18.01.2022) மற்றும் குடியரசுதினம் (26.01.2022) ஆகியதினங்களைமுன்னிட்டு, அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL2/FL3 மதுபானவிடுதிகள் / ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்டதினங்களில் மூடப்படவேண்டும் எனவும், அன்றையதினங்களில் “மது விற்பனை இல்லாத நாளாக” (Dry Day) அனுசரிக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து,
1.திருவள்ளுவர் தினம் (15.01.2022),
2.வள்ளலார் நினைவுதினம் (18.01.2022),
3.குடியரசுதினம் (26.01.2022)
ஆகிய மூன்றுநாட்கள் முழுவதும் ஈரோடுமாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபானக்கடைகள்,அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL2/FL3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும்.
மேலும், அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments